எதிர்வரும் பத்து ஆண்டுகளில் மர நடுகைக்காக, 3.16பில்லியன் டொலர்களை செலவிட சமஷ்டி அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக இயற்கை வளத்துறை அமைச்சர் சீமஸ் ஓ ரீகன் (Seamus O’Regan) தெரிவித்தார்.
2050ஆம் ஆண்டுக்குள் காபன் வாயு அற்ற தேசத்தினை கட்டியெழுப்பும் திட்டத்தின் முதற்படியாவே இந்த மர நடுகைத் திட்டம் உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
மரங்கள் காபன் அமிழ்விலிருந்து தேசத்தையும், நபர்களையும் பாதுகாப்பதோடு அடுத்த சந்ததியினரையும் காக்கின்றது என்றும் அவர் கூறினார்.
காலநிலை மாற்றத்தினால் ஏற்பட்டுள்ள பின்னடைவுகளிலிருந்து மீள்வதற்கு இவ்விதமான செயற்பாடுகள் அவசியமாக உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.