மாகாணசபைத் தேர்தல்களை நடத்துவது தொடர்பாக, கட்சித் தலைவர்கள் கூட்டத்துக்குப் பின்னர், ஆராய்வதற்கு சிறிலங்கா அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்துவதற்கான யோசனையை, நேற்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில், உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன், சமர்ப்பித்திருந்தார்.
தாமதமாகி விட்ட மாகாணசபைத் தேர்தலை நடத்துவது தொடர்பாக, இறுதி முடிவை எடுப்பதற்கு முன்னர் கட்சித் தலைவர்கள் மட்டத்தில் கலந்துரையாடுவதென்று அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக, அமைச்சரவை இணைப் பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.