மக்களுக்காக எதையும் விட்டுக் கொடுத்து , ரஜினியுடன் இணைந்து களமிறங்க தயாராக உள்ளதாக, மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
கோவில்பட்டியில் முன்னெடுத்த பரப்புரையின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
“எங்களின் பிரசாரத்திற்கு அனுமதி கொடுத்தது ஏன்? சென்றால், தடுப்பது ஏன்? ஒவ்வொரு இடத்திலும் எங்களின் பிரசாரத்திற்கு அனுமதி மறுக்கப்படுகிறது. விஸ்வரூபம் என்பது யார் எங்களுக்கு எதிராக செயல்படுகிறார்கள் என்பதை பொறுத்தது. ” என்றும் கமல்ஹாசன் கூறியுள்ளார்.