வறிய நாடுகளுக்கு கொரோனோ தடுப்பூசி உள்ளிட்ட மருத்துவ உதவிகளுக்காக கனடா 485மில்லியன் டொலர்களை வழங்கவுள்ளதாக சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் கரினா கோல்ட் (Karina Gould)அறிவித்துள்ளார்.
உலக சுகாதார அமைப்பு,பிரான்ஸ் அரசாங்கம், ஐரோப்பிய ஆணையம் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை ஆகிய அமைப்புக்களும் சர்வதேச ரீதியான உதவிகளை அறிவித்துள்ளது.
இந்நிலையிலேயே கனடாவும் தனது பங்களிப்பினை வழங்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதேநேரம், கொரோனா தடுப்பூசிகள் கனடிய தேவைகளுக்கு மேலதிகமாக இருக்குமிடத்து வறிய நாடுகளுடன் பகிர்வதற்கு தயாராக இருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.