கொரோனா தடுப்பூசியை இந்தவாரம் 10 மாகாணங்களின் 14 தளங்களில் பொதுமக்கள் பெற்றுக்கொள்ளவுள்ளனர் என்று தடுப்பூசி விநியோகச் செயற்றிட்டத்தின் பொறுப்பதிகாரியான மேஜர் ஜெனரல் டேனி ஃபோர்டின் (Dany Fortin) தெரிவித்தார்.
விநியோகப்பணிகளுக்கான ஏற்பாடுகள் நிறைவுக்கு வந்திருப்பதை இட்டு தான் மகிழ்ச்சி அடைவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், முதற்கட்டமாக கிடைத்துள்ள 30ஆயிரம் மருந்தளவை தமக்கு வழங்கப்பட்ட திட்டத்தின் அடிப்படையில் களஞ்சியப்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார்.
வெகுஜனப் பயன்பாட்டிற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியாகி உள்ள நிலையில்அடுத்து வரும் நாட்களில் இரண்டாவது தொகுதி தடுப்பு மருந்தை எதிர்பார்க்கலாம் என்றும் குறிப்பிட்டார்.