4இலட்சத்து 41ஆயிரம் “கல்விக் கடிதங்களை” அனுப்பியுள்ளதாக கனடிய வருமான முகவரகம் தெரிவித்துள்ளது.
கனடிய வருமான முகவரகத்தின் பேச்சாளர் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளது.
2019ஆம் ஆண்டிலிருந்து ஐயாயிரம் டொலர்களுக்கு குறைந்த வருமானம்பெறுபவர்கள், வேலை வாய்ப்புக்களை அற்றவர்கள் ஆகிய வகையறைகளுக்குள் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கே இவ்வாறு கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இவர்களுக்கு வழங்கப்பட்ட கடன்களை மீளச் செலுத்தாமையின் காரணமாகவே அவற்றை மீளச் செலுத்தும் அறிவினை புகட்டும் வகையிலேயே கடிதங்கள் அனுப்ப பட்டுள்ளதாக பேச்சாளர் கூறினார்.
அதனாலேயே “கல்விக் கடிதங்கள்” என்று விளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்