அடுத்தவார இறுதிக்குள் கனடா இரண்டு இலட்சம் வரையிலான கொரோனா தடுப்பூசிகளை பெறவுள்ளதாக கொள்வனவுத்துறை அமைச்சர் அனிதா ஆனந்த் தெரிவித்தார்.
இந்த கொள்வனவும், பைசர் மற்றும் பயோ என் டெக் நிறுவனத்திடமிருந்தே நடைபெறவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன் மொடோர்னா நிறுவனத்திடமிருந்து ஒரு இலட்சத்து 68ஆயிரம் தடுப்பூசிகளை முதற்கட்டமாக பெறுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இது, டிசம்பர் மாத இறுதி வாரத்தில் நடைபெறலாம் என்றும் அவர் தெரிவித்தார்.