அமெரிக்கா மற்றும் இந்தியாவிற்கு இடையிலான அடிப்படை மற்றும் ஒத்துழைப்பு உடன்படிக்கை கையெழுத்தாகியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க இராணுவ அமைச்சர் கிறிஸ்டோபர் மில்லருடன் தொலைப்பேசி வாயிலாக உரையாடிய பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த ராஜ்நாத் சிங் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இரு நாடுகளுக்கு இடையிலான அடிப்படை பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பு உடன்படிக்கை கையெழுத்தானது எதிர்கால இராணுவ ஒத்துழைப்பில் சக்திவாய்ந்த சமிக்ஞையாக கருதப்படுகிறது” எனத் தெரிவித்தார்.