பாகிஸ்தானில் பாலியல் வல்லுறவு குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்கம் செய்யும், அவசர சட்டத்துக்கு பாகிஸ்தான் ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார்.
பாகிஸ்தானில் பாலியல் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை விதிக்கும், அவசர சட்டத்துக்கு பிரதமர் இம்ரான் கானின் அமைச்சரவை கடந்த மாதம் ஒப்புதல் அளித்தது.
இந்த சட்டத்தின்படி பாலியல் வல்லுறவு குற்றவாளிகளுக்கு இரசாயன முறையில் ஆண்மை நீக்கம் செய்யப்படும்.
இந்த அவசர சட்டத்துக்கு பாகிஸ்தான் ஜனாதிபதி நேற்று ஒப்புதல் வழங்கியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள கீச்சக பதிவில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்குகளை விரைவுபடுத்த இந்த அவசர சட்டம் உதவும் என தெரிவித்துள்ளார்.