ராஜிவ்காந்தி கொலை வழக்கில் வேலூர் சிறையில் ஆயுள்தண்டனை அனுபவித்து வரும் முருகன், ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், அவரை காப்பாற்ற தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றும், முருகனின் சட்டத்தரணி புகழேந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இன்று மாலை முருகனையும், பெண்கள் சிறையில் உள்ள அவரது மனைவி நளினியையும் சந்திக்க முருகனின் சட்டத்தரணி புகழேந்திக்கு சிறை நிர்வாகம் அனுமதி மறுத்துள்ளது.
இதையடுத்து கருத்து வெளியிட்டுள்ள புகழேந்தி, ‘தகவல் அறியும் சட்டத்தின் கீழ் சிறைத்துறை ஊழலை கேட்க முயன்றதால், முருகனின் மீது பொய்யான காரணத்தை கூறி வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதன் மூலம் அவர்களது விடுதலையை தடுக்க முயல்கின்றனர். சிறையில் முருகன் துன்புறுத்தப்படுகிறார். ” என்று தெரிவித்துள்ளார்.