இந்தியப் பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று பிரித்தானிய பிரதமர் பொறிஸ் ஜோன்சன் (Boris Johnson) ஜனவரி மாதம் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
இந்தியாவின் 72வது குடியரசு தினவிழா வரும் ஜனவரி 26-ம் திகதி கொண்டாடப்பட உள்ளது.
அதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கும்படி பிரித்தானிய பிரதமர் பொறிஸ் ஜோன்சனுக்கு (Boris Johnson) இந்திய பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்தார்.
இந்த அழைப்பை ஏற்று பிரித்தானிய பிரதமர் பொறிஸ் ஜோன்சன் இந்திய குடியரசு தின விழாவில் பங்கேற்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக பிரித்தானிய பிரதமர் ஜோன்சன் (Boris Johnson) வரும் ஜனவரி மாதம் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்வார் என இங்கிலாந்து வெளியுறவு செயலாளர் டொமினிக் ராப் (Dominic Raab) தெரிவித்துள்ளார்.