முல்லைத்தீவில், இந்திய இழுவைப் படகினால், பாதிக்கப்பட்ட மீனவர்களினால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்திற்கு, வடமாகாண மீனவர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
சிறிலங்கா கடற்பரப்பிற்குள் இந்திய மீனவர்கள் அத்துமீறி தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுவதை கட்டுப்படுத்த வேண்டும் என சிறிலங்கா மற்றும் இந்திய அரசிடம் வடமாகாண கடற்றொழிலாளர்கள் இணையத்தினரால், கோரிக்கைககள் அடங்கிய மகஜர்கள் கையளிக்கப்பட்டுள்ளன.
குறித்த மகஜர்களை, யாழிலுள்ள இந்திய துணைத்தூதுவர் அலுவலகத்திலும், யாழ் மாவட்ட செயலகத்தில் மேலதிக அரசாங்க அதிபரிடமும் வடமாகாண கடற்றொழிலாளர்கள் இணையத்தினர் இன்று வழங்கி வைத்தனர்.