சசிகலா விடுதலையாகும் நாளில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை தொடர்பாக, கர்நாடக உளவுத்துறை சிறை நிர்வாகத்துக்கு அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.
சசிகலாவின், தண்டனை காலம் முடிவுக்கு வரும் நிலையில், ஜனவரி 27ஆம் திகதி அவர் விடுதலை செய்யப்படுவார் என கர்நாடக சிறைத்துறை கூறியிருந்தது.
இந்த நிலையில், சசிகலா விடுதலை நாளன்று பின்பற்ற வேண்டிய நடவடிக்கை குறித்து கர்நாடக உளவுத்துறை, பரப்பன அக்ரஹாரா சிறை நிர்வாகத்துக்கு அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.
சசிகலா விடுதலை செய்யும்போது, அவரை அழைத்து செல்ல ஏராளமான தொண்டர்கள் வரலாம் என்பதால், சட்டம் – ஒழுங்கு பிரச்னை ஏற்படாத வகையில், அவர்களை சிறை பகுதிக்கு வராத வகையில் எல்லையில் தடுத்து நிறுத்த வேண்டும்.
அவரது பாதுகாப்பை கருதி இரவு 7 மணிக்கு பதிலாக, இரவு 9:30 மணிக்கு விடுதலை செய்யலாம்.
அவரை கர்நாடக -தமிழக எல்லையான அத்திப்பள்ளி வரை பாதுகாப்புடன் அழைத்து சென்று விட்டு வர வேண்டும் என்றும், அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.