பயங்கரவாதியான ட்ரம்ப் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறுவது, மகிழ்ச்சி அளிக்கிறது என ஈரான் ஜனாதிபதி ஹசன் ரூஹானி தெரிவித்துள்ளார்.
ட்ரம்ப்பின் தோல்வி குறித்து ஈரான் ஜனாதிபதி ஹசன் ரூஹானி கருத்து வெளியிட்டுள்ளார்.
‘‘ஜோ பைடனின் வருகையைப் பற்றி நாங்கள் மகிழ்ச்சி அடையவில்லை. ஆனால் ட்ரம்ப் வெளியேறுவதைக் கண்டு நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்.
மூர்க்கத்தனமான, சட்டவிரோதி மற்றும் பயங்கரவாதியான ட்ரம்ப் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறுவது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது’’ என்று ஈரான் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.