லண்டன், தென்கிழக்கு பகுதிகளில் கொரோனா வைரசின் புதிய மாறுபட்ட வடிவத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளதால் அங்கு முடக்கநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
சில நாட்களுக்கு முன்பு இங்கிலாந்தில் மீண்டும் கொரோனா வைரசின் பரவல் வேகமாக அதிகரித்ததை தொடர்ந்து லண்டன், தென்கிழக்கு பகுதிகளில் கொரோனா வைரசின் புதிய மாறுபாடு மற்றும் வடிவத்தை விஞ்ஞானிகள் அவதானித்து ஆய்வுகளை மேற்கொண்டிருந்தனர். இந்நிலையில் விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களை தற்போதே வெளியிட்டுள்ளனர்.
இதேவேளை, இது தொடர்பில் சுகாதாரத்துறை அமைச்சர் மெட் ஹன்ஹாக் (Med Henhawk)கூறுகையில், லண்டன், ஹெர்ட்போர்ட்ஷையர் (Hertfordshire) , எசெக்ஸ்(Essex) மற்றும் சில பகுதிகள் இன்று முதல் மிக உயர்ந்த அளவிலான கொரோனா வைரஸ் கட்டுப்பாடு நடவடிக்கைகள் அமுல்படுத்தப்படும்.
கொரோனா வைரஸின் புதிய மாறுபாட்டை நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம், இது இங்கிலாந்தின் தெற்குப் பகுதியில் வேகமாக பரவுகிறது.
தற்போதைக்கு, கொரோனா தடுப்பூசிகளால் புதிய மாறுபாட்டிலிருந்து மக்களைப் பாதுகாக்க முடியும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.
இருந்தாலும் கூட, புதிய மாறுபாடு வேகமாக வளர்ந்து வருகிறது. இந்த உருமாற்றம் தற்போதுள்ள வகைகளை விட வேகமாக வளர்ந்து வருவதாக ஆரம்ப ஆய்வு தெரிவிக்கிறது என்று மேலும் தெரிவித்துள்ளார்.