கடந்த வாரம் நைஜீரியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள கட்சினாவின் பாடசாலையொன்றிலிருந்து நூற்றிற்கும் மேற்பட்ட மாணவர்கள் கடத்தப்பட்ட சம்பவத்திற்கு போக்கோ ஹரம் தீவிரவாத அமைப்பு உரிமை கோரியுள்ளது.
ஒலிநாடா செய்தியொன்றில் போக்கோ ஹரம் அமைப்பின் தலைவர் அபுபக்கர் செக்காவு தாமே மாணவர்களைக் கடத்தியதாக கூறியுள்ளார்.
எங்கள் அமைப்பு மேற்குலகின் கல்விமுறையை எதிர்க்கின்றது என்று தெரிவித்துள்ள அவர் நாங்களே அதனைச் சுட்டிக்காட்டவே மாணவர்களைக் கடத்தினோம் என குறிப்பிட்டுள்ளார்.
எனினும் கடத்திய மாணவர்கள் பற்றி எவ்வித தகவல்களையும் அவர் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.