யாழ். மருதனார்மடம் பொதுச்சந்தை கொத்தணியில் மேலும் 8 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
யாழ். மருத்துவபீட ஆய்வுகூடத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட சங்கானைச் சந்தை
வர்த்தகர்கள் 100 பேரின் மாதிரிகள் பரிசோதகைக்கு உட்படுத்தப்பட்டன.
சங்கானையைச் சேர்ந்த 4 பேரும், உடுவில், பண்டத்தரிப்பு, மானிப்பாய் மற்றும் வடலி யடைப்பு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த தலா ஒருவரும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதன்மூலம் மருதனார்மடம் பொதுச்சந்தை கொரோனா கொத்தணி தொற்றாளர்கள் எண்ணிக்கை 66 ஆக அதிகரித்துள்ளது.