‘மொடர்னா’ நிறுவனம் உருவாக்கிய கொரோனா தடுப்பூசியானது 94 சதவீதம் பயனுள்ளதாக தெரிவித்துள்ள அமெரிக்கா அதனை பயன்படுத்துவதற்கு அனுமதி அளித்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள அமெரிக்கர்கள் பைசர்,பயோஎன்டெக் கொரோனா தடுப்பூசியைப் பெறத் தொடங்கிய மறுநாள் ‘மொடர்னா’ உருவாக்கிய தடுப்பூசிக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாக விஞ்ஞானிகள் ஒப்புதல் அளித்தனர்.
உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தினர், தடுப்பூசியின் இரண்டாவது அளவு கிடைத்து குறைந்தது 14 நாட்களுக்குப் பின்னர் கொரோனா அறிகுறி ஏற்படுவதைத் தடுப்பதில் ‘மொடர்னா’ மிகவும் பயனுள்ளதாக இருந்ததாக கூறியுள்ளனர்.