ரஜினியோடு கூட்டணி அமையும் பட்சத்தில் இருவரில் யார் முதல்வர் என்பதை பேசி முடிவெடுப்போம் என மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் கூறினார்.
தென்மாவட்டங்களில் தேர்தல் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் இளைஞர்கள் மற்றும் பெண்களை சந்தித்து கலந்துரையாடினார்.
அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில், கூட்டணி வைப்பது குறித்து இதுவரை எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை. ரஜினியோடு கூட்டணி அமையும் பட்சத்தில் இருவரில் யார் முதல்வர் என்பதை பேசி முடிவெடுப்போம்.
ஆன்மீகத்தை நோக்கி நான் செல்லவில்லை. என்னை நோக்கியும் அது வரத்தேவையில்லை. மக்களிடத்தில் ஆன்மீகம் இருக்கிறது என்றால் அதுவும் என் வாழ்வில் ஒரு அங்கமாகத்தான் இருக்கும். எனக்கு தேவையா இல்லையா என்பது என்னுடைய பிரச்சினை.
ஒரு நபரின் அன்புக்கும், கட்சியில் சேருவதற்கும் நாங்கள் நெற்றியை பார்த்து முடிவு செய்வதில்லை. கண்களை பார்த்துதான் முடிவு செய்கிறோம். அதில் நேர்மை தெரிந்தால் அதுதான் முதல் தகுதி என்று மேலும் தெரிவித்தார்.