பொதுமுடக்கத்தை மாற்றியமைத்து வணிகத்திற்காக மீண்டும் தமது வளாகங்களை திறக்க அனுமதிக்குமாறு ரொரன்ரோவின் சிறு வணிக நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
#Think Out sideThe Big Box என்ற ஹேஷ்டேக்கைப் பயன்படுத்தி, உள்ளூர் கடைகள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் அவர்கள் எவ்வளவு காலம் தமது வளாகங்களை திறந்திருக்கிறார்கள், எத்தனை பேர் வேலை செய்கிறார்கள் என்ற புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர்.
மாகாண அரசு கட்டுப்பாடுகளை மாற்றியமைத்து, தனிப்பட்ட முறையில் கொள்வனவு செய்ய அனுமதிக்கும் என்று நம்பிக்கை கொண்டிருப்பதாகவும் கூறியுள்ளனர்.
நவம்பர் 23ஆம் திகதி நகரம் மூடப்பட்டதிலிருந்து, வால்மார்ட் போன்ற கடைகள் திறந்த நிலையில் இருக்க அனுமதிக்கும் முடிவை ஏராளமான மக்கள் விமர்சித்துள்ளனர்.
அதேநேரத்தில் சிறிய சில்லறை விற்பனையாளர்கள் தெருவோர விநியோகத்தை மட்டுமே வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.