வவுனியா நீதிமன்றில் பணியாற்றும் அரச சட்டவாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நேற்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் சோதனையின் போதே, கல்முனையைச் சேர்நத அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொற்றுக்குள்ளான அரச சட்டவாளர் வவுனியாவில் இருந்து கல்முனைக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதையடுத்து, வவுனியா நீதிமன்ற செயற்பாடுகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.