இந்தியாவில் தயாராகும் கொரோனா தடுப்பூசி மருந்து, தொற்று நோய்க்கு எதிராக போராடும் உலக மக்களுக்கும் கிடைக்கும் என்று, இந்திய வெளியுறவு செயலர் விகாஸ் ஸ்வரூப் தெரிவித்துள்ளார்.
ஐ.நா. பொதுச் சபையில், கொரோனா குறித்த சிறப்புக் கூட்டத்தில், உரையாற்றிய விகாஸ் ஸ்வரூப்
“கொரோனா தொற்று நோயை எதிர்கொள்வதில், உலக நாடுகள் இணைந்து செயல்பட வேண்டும்.
ஒருவரோடு ஒருவர் கைகோர்த்து, தலைமைப் பண்பையும், ஒற்றுமையையும், வெளிக்காட்ட வேண்டிய நேரமிது.
தடுப்பூசி மருந்து தயாரிப்பு திறன், மருந்து சேமிப்பு மற்றும் விநியோகத்திற்கான குளிர்பதன வசதி ஆகியவற்றை, இந்தியா உலக நாடுகளுக்கு வழங்கும்.
தடுப்பூசி மருந்து தயாரிப்பில், இந்தியா முதலிடத்தில் உள்ளது.
உலகளவில், 60 சதவீத தடுப்பூசிகள் இந்தியாவில் தயாரிக்கப்படுகின்றன.
இந்தியாவில் தயாராகும் கொரோனா தடுப்பூசி மருந்து, இந்த தொற்று நோய்க்கு எதிராக போராடும் உலக மக்களுக்கும் கிடைக்கும்.” என்று அவர் தெரிவித்துள்ளார்.