டெல்லி போராட்டம் நடத்தும் விவசாயிகளின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு தேசிய அளவில் குழு அமைக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது.
டெல்லி நகரில் ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெரிசல்கள் மற்றும் கொரோனா வைரஸ் பரவல் அச்சம் ஆகிய விடயங்கள் தொடர்பில் குறிப்பிடப்பட்டு தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்குகள் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
இதன்போதே இவ்வாறு அறிவுரை வழங்கிய உயர் நீதிமன்றம், விவசாயிகள் டெல்லிக்குள் நுழைவதை தடுத்தது யார்? சாலைகளை மூடியது யார்? என மத்திய அர சிடம் கேள்விகளை தொடுத்திருந்தது.
அத்துடன் கடுமையான குளிரிலும் போராடும் விவசாயிகளின் கோரிக்கையை கேட்க வேண்டும். விவசாயிகள் எதிர் கொண்டு வரும் பிரச்சினைகளை தீர்க்க தேசிய அளவில் குழு அமைக்க வேண்டும்.
சர்ச்சைக்குரிய வேளாண் சட்டங்கள் தொடர்பாக விவசாயிகளுடன் அரசாங்கத்தின் பேச்சுவார்த்தைகள் எடுபடாது என்றும் மீண்டும் தோல்வியடையும் என்றும் உயர் நீதிமன்றம் தெரிவித்தது
இந்த போராட்டம் விரைவில் ஒரு தேசிய பிரச்சினையாக மாறும், ஆகவே பேச்சுவார்த்தைகளின் மூலம் இது உடனடியாக தீர்க்கப்பட வேண்டும் என்று உயர் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.