மிலேனியம் சவால் நிறுவனத்தின் 480 மில்லியன் டொலர் கொடையை விலக்கிக் கொண்ட போதிலும், சிறிலங்காவுக்கு தொடர்ந்து உதவி வழங்கப்படும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம், இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
சிறிலங்காவுக்கு ஒரு நண்பனாகவும், பங்காளியாகவும் அமெரிக்கா இருந்து வருவதாகவும், கொரோனா தொற்றுக்கு எதிராக போராடும், சிறிலங்காவின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப தொடர்ந்து உதவிகள் வழங்கப்படும் என்றும், அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.
வொசிங்டனில் நேற்றுமுன்தினம் நடந்த எம்சிசி நிறுவனத்தின் பணிப்பாளர்கள் சபைக் கூட்டத்தில், சிறிலங்காவுக்கு வழங்கத் திட்டமிட்டிருந்த 480 மில்லியன் டொலர் கொடையை விலக்கிக் கொள்வதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது என்பதையும், அமெரிக்க தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது.