கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில்,தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சைகளை அளிப்பதற்கு அனுமதிக்க சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தனியார் மருத்துவமனைகளில் தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு அனுமதிப்பது குறித்து, பேச்சுக்கள் நடத்தப்பட்டு வருவதாக சிறிலங்கா இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்க மருத்துவமனைகளில் மாத்திரமே தற்போது கொரோனா சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
அரசாங்க மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவதற்கு தயங்கும் பலர் நோயை மறைக்க முற்படுவதை கருத்தில் கொண்டே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பலரிடம் இருந்து வேண்டுகோள்கள் விடுக்கப்பட்டிருந்தன.
கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளிக்க விரும்பும், தனியார் மருத்துவமனைகளிடம் இருந்து, ஏற்கனவே திட்டங்கள் கோரப்பட்டுள்ளன.
இதுதொடர்பான முடிவு அடுத்தவாரம் எடுக்கப்படும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.