கொரோனா பரவல் காலகட்டத்தில் 7 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் நாட்டினுள் பிரவேசித்துள்ளதாக கனடிய எல்லைகள் பாதுகாப்பு முகவரகம் தெரிவித்துள்ளது.
வெளிநாடுகளில் பணி புரிந்தவர்கள், மற்றும் நாட்டிலிருந்து தேவைகள் நிமித்தம் வெளியேறியவர்கள் உள்ளிட்டவர்கள் இதில் உள்ளடங்குகின்றனர்.
அதுமட்டுமன்றி வேறு நாடுகளில் இருந்த கனடிய பிரஜைகளும் நெருக்கடியான நிலைமைகளை உணர்ந்து சொந்தநாட்டிற்கு திரும்பும் தீர்மானத்தினை எடுத்திருந்ததாகவும் முகவரகம் குறிப்பிடுகின்றது.
கனடா கடந்த மார்ச்மாதத்தின் பின்னர் தனது நிலத் தொடர்பு எல்லைகள் உட்பட அனைத்து போக்குவரத்துக்களையும் நிறுத்தியிருந்ததோடு, அத்தியாவசிய பயணங்களுக்கு அனுமதி அளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.