சீனாவின் சாங் கே-5 (China’s Chang’e-5) என்ற விண்கலம் சந்திரனில் இருந்து கல், மண் போன்ற மாதிரிகளை எடுத்துக்கொண்டு வெற்றிகரமாக பூமியில் தரையிறங்கியுள்ளது.
இந்த விண்கலம், நெய் மங்கோல் எனப்படும் சீனாவின் தன்னாட்சிப் பகுதியில் அந்நாட்டு நேரப்படி இன்று அதிகாலை 1.30 மணி அளவில் தரையிறங்கியது.
விண்கலம் வந்தடைந்த இடத்தை, அகச்சிவப்புக் கதிர்களைப் பயன்படுத்தி, கண்டுபிடித்ததோடு அதனை வானூர்திக் குழுவினர் சென்று மீட்டுள்ளனர்.
அமெரிக்காவின் அப்பல்லோ மற்றும் சோவியத் ரஷ்யாவின் லூனா திட்டங்கள் மூலம் 40 ஆண்டுகளுக்கு முன் சந்திரனில் இருந்து மாதிரிகள் பூமிக்கு கொண்டு வரப்பட்டன.
அதற்குப் பின் தற்போது சீனா, இந்த மாதிரிகளைக் கொண்டு வந்துள்ளது.இந்த மாதிரிகள் சந்திரன் மண்ணியல் மற்றும் ஆரம்ப கால வரலாறு குறித்து அறிந்துகொள்ள உதவக்கூடும் என்று நம்பப்படுகின்றது