நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை, 35 ஆயிரத்தை எட்டும் நிலையில் இருப்பதாக சுகாதார அமைச்சின் தகவல்கள் கூறுகின்றன.
நேற்றிரவு சுகாதார அமைச்சின் தொற்று நோயியில் பிரிவு வெளியிட்டுள்ள தரவுகளின் அடிப்படையில், இதுவரை இனங்காணப்பட்டுள்ள தொற்றாளர்களின் எண்ணிக்கை 34 ஆயிரத்து 734 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த சில வாரங்களாக தினமும் 600 இற்கும் குறையாத தொற்றாளர்கள் அடையாளப்படுத்தப்பட்டு வருகின்றனர்.
எனவே, இன்று, மொத்த தொற்றாளர் எண்ணிக்கை 35 ஆயிரத்தைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.