கனடாவிற்கான மிகப்பெரிய தடுப்பூசி விநியோகத்தில் இடர்பாடுகளை ஏற்படுத்துவதற்கு சில சக்திகள் தீவிரமாக செயற்படலாம் என்று கொரோனா தடுப்பூசி நிறுவனங்களை கனடிய உளவு நிறுவனங்கள் எச்சரித்துள்ளன.
அத்துடன் கனடிய தடுப்பூசி விநியோகச் சங்கிலியில் பங்காளர்களாக உள்ள, கப்பல், விமான, பணியாளர்கள் மற்றும் மருந்து வியாபார நிறுவனங்கள், சாதாரண தொழிலாளர்கள் என்று அனைத்து தரப்பினரும் அவதானமாக இருக்குமாறும் உளவு நிறுவனங்கள் வலியுறுத்தியுள்ளன. விசேடமாக வெளிநாட்டு தரப்புக்களாக அடையாளப்படுத்தும் ‘நடிகர்களிடமிருந்து’ இத்தனை தரப்பினரும் மிகுந்த அவதானத்துடன் இருப்பதோடு, ஒவ்வொரு கொள்வனவு மற்றும் விநியோகத்தின் போதும் மேற்பார்வையும் தொடர்ச்சியான கண்காணிப்பும் அவசியம் என்றும் உளவு நிறுவனங்களால் முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது