உலகெங்கிலும் உள்ள நான்கு பேரில் ஒருவருக்கு இரண்டு ஆண்டுகளுக்கு கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசியை பெற முடியாமல் போகலாம் என பி.எம்.ஜே. இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிததாக செய்யப்பட்ட ஆய்வொன்றை அடிப்படையாக வைத்து இந்த தகவலை அந்த இதழ் வெளியிட்டுள்ளது.
மேலும் அந்த இதழில், கொரோனா தடுப்பூசிகளின் திட்டமிடப்பட்ட அளவுகளில் அரைவாசியை அமெரிக்கா, ஜப்பான் மற்றும் அவுஸ்திரேலியா போன்ற உயர் வருமான நாடுகளால் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ள தாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறு கொள்வனவு செய்யப்பட்ட தடுப்பூசிகளின் அளவானது உலக சனத்தொகையில் 14 சதவீதமாகும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அனைத்து தடுப்பூசி உற்பத்தியாளர்களின் உற்பத்தியை அளவிட்டதில் 2021 ஆம் ஆண்டின் இறுதிக்குள் ஆறு பில்லியன் அளவுகள் கிடைக்கும்.
இதனால் 2022 வரை உலக சனத்தொகையில் கால்வாசி பகுதியினருக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி இல்லாமல் போய்விடும் என்றும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.