மாகாணங்களில் உள்ள நீண்டகால பராமரிப்பு இல்லங்கள் ஓட்டோவாவினால் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களுக்கு அமைவாக தரங்களின் உயர் தன்மையை பேண மறுத்தால் சமஷ்டி அரசாங்கத்தின் நிதியுதவி கிடைக்காது என்று பிரதமர் ஜஸ்டின் ரூடோ தெரிவித்துள்ளார்.
கடந்த காலத்தில் நீண்டகால பராமரிப்பு இல்லங்களில் சுகாதார சீர்கேடுகள் உள்ளிட்ட பல விடயங்கள் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் அவற்றை ஒழுங்குபடுத்தி இல்லங்களின் தரத்தினை மேம்படுத்துவதற்கு சமஷ்டி அரசாங்கம் அறிவுறுத்தலை வழங்கியிருந்தது.
இந்நிலையிலேயே அவர் இவ்வாறுகூறியுள்ளதோடு, நாட்டின் சிரேஷ்ட பிரஜைகளுக்கு ஏன் உயர்ந்த சேவையை வழங்கவில்லை என்பதை அந்தந்த இல்லங்களே கூற வேண்டும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.