மொடர்னா நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை பகிர்ந்தளிப்பதற்கான அனுமதி இன்னமும் கனடிய சுகாதாரத்துறையிடமிருந்து கிடைக்கவில்லை என்று கொரோனா தடுப்பூசி விநியோக தேசிய செயற்றிட்டத்தற்கு பொறுப்பான மேஜர் ஜெனரல் டேனி ஃபோர்டின் (Dany Fortin) தெரிவித்துள்ளார்.
இம்மாத இறுதியில் மொடர்னா நிறுவனத்திடமிருந்து ஒரு இலட்சத்து அறுபத்து எட்டாயிரம் வரையிலான தடுப்பூசிகள் கொள்வனவு செய்யப்பட்டு கனடாவுக்கு கொண்டுவரப்படவுள்ள நிலையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சுகாதரத்துறையின் அனுமதி கிடைத்தவுடன் நாடாளாவிய ரீதியில் மொடர்னா தடுப்பூசியை விநியோகப்பதற்கு தயாராக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் பைசர் மற்றும் பயோஎன்டெக் தடுப்பூசியின் முதற்கட்ட விநியோக பணிகள் சிறப்பான முறையில் மாகாண ரீதியாக இடம்பெற்றிருந்தது என்றும்அவர் கூறினார்.