விவசாயிகளின் போராட்டம் இந்தியாவின் உள்விவகாரம் சார்ந்தது என பிரித்தானியா தெரிவித்துள்ளது.
விவசாயிகள் பிரச்சினைக்கு பிரித்தானிய அமைச்சர்கள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், இந்த பிரச்சினையில் தலையிட வேண்டாம் என இந்தியா வலியுறுத்தியுள்ளது.
இதனைத் தொடர்ந்தே பிரித்தானியா இவ்வாறு கூறியதோடு பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சனின் இந்திய விஜயத்தினையும் பிரித்தானியா உறுதிப்படுத்தியுள்ளது.