அமெரிக்காவின் முப்படைகளின் தலைமை தளபதி ஜெனரல் மார்க் மில்லி டோஹா நகரில், தலிபான் அமைப்பின் பிரதிநிதிகளை இரகசியமாக சந்தித்துப் பேசியுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த சந்திப்பின்போது, ஆப்கானிஸ்தானில் அதிகரித்துள்ள தலிபான்களின் தாக்குதல்களை குறைப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த சந்திப்பிற்கு பின்னர் ஆப்கானிஸ்தானுக்குச் சென்றுள்ள, ஜெனரல் மார்க் மில்லி, அங்கு ஜனாதிபதி அஷ்ரப் ஹிலானியை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்.
தலிபான்களுடனான அமைதி பேச்சு முக்கிய கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அமெரிக்க தலைமை தளபதி ஜெனரல் மார்க் மில்லியின் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருத்தப்படுகிறது.