கொரோன வைரஸ் தொற்றுக்குள்ளான பெண்ணொருவர் கொழும்பு டி சொய்சா வைத்தியசாலையில் நான்கு குழந்தைகளை பிரசவித்துள்ளார்.
இவ்விரு ஆண் மற்றும் பெண் குழந்தைகளையே அவர் பெற்றெடுத்ததாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
தாய் மற்றும் குழந்தைகள் நல்ல உடல்நலத்துடன் இருப்பதாகவும் வைத்தியசாலையில் தனி தீவிர சிகிச்சை பிரிவுகளில் அவர்கள் வைக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொழும்பு குப்பியாவத்தையைச் சேர்ந்த 29 வயதுடைய குறித்த பெண் இரண்டு வாரங்களுக்கு முன்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.