அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ள ஜோ பைடன், அடுத்தவாரம் கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொள்ளவுள்ளார் என்று கூறப்படுகிறது.
பிரித்தானியா, அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகள் கொரோனா தடுப்பூசியை மக்களுக்கு செலுத்தும் பணிகளை ஆரம்பித்துள்ளன.
இந்தநிலையில் அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பொறுப்பேற்கவுள்ள ஜோ பைடன், அடுத்த வாரம் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள உள்ளதாக ஆட்சி மாற்றத்திற்காக அமைக்கப்பட்ட குழு தெரிவித்துள்ளது.
தடுப்பூசி மீதான நம்பிக்கையை மக்கள் மத்தியில் அதிகரிக்க செய்வதற்காகவே, ஜோ பைடென் தடுப்பூசி போட்டுக் கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.