பிராந்தியத்தில் தொடர்ந்தும் கொரோனா தொற்றுப் பரவல் அதிகரிக்கும் பட்சத்தில் கடுமையான முடக்கல் நடவடிக்கைகளை எடுக்க வேண்டி ஏற்படுமென்று ஒன்ராரியோ பிரதமர் டக் போர்ட் தெரிவித்துள்ளார்.
தற்போதைய நிலையில் ஒன்ராரியோ முழுவதும் தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுகின்றமை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த நிலைமையை தொடர்ந்தும் அனுமதிக்க முடியாது என்றும் அவர் கூறினார். ஆகவே அவசியம் ஏற்பட்டால் முடக்கல் அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் அதற்காக தயார்ப்படுத்திலல் தமது அரசு பணிகளை நிறைவு செய்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.