அடுத்துவரும் நாட்களில் முன்களப்பணியாளர்களுக்கான தடுப்பூசிகள் போடப்படும் செயற்பாடுகளில் தீவிரத் தன்மை காணப்படுமென பொதுசுகாதாரத்துறைத் தகவல்கள் தெரிவித்துள்ளன.
தற்போதைய நிலையில் சிரேஷ்ட பிரஜைகள் மற்றும் அதிக ஆபத்தில் உள்ளவர்களுக்கே முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசிகள் தொடர்ச்சியாக போடப்பட்டு வருவதாகவும் அத்தகவல்கள் குறிப்பிடுகின்றன.
மேலும் பிராந்திய ரீதியில் அடையாளமிடப்பட்ட வெளிநோயாளர்கள் பிரிவுகளில் தடுப்பு மருந்து விநியோகம் தடையின்றி நடைபெறுவதாகவும் உறுதிபடத் தெரிவிக்கப்பட்டுள்ளது.