இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறலை தடுத்து நிறுத்தக் கோரி, முல்லைத்தீவு மீனவர்கள் இன்று நான்காவது நாளாக போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்திய மீனவர்களின் அத்துமீறலைத் தடுக்க உரிய தரப்பினருக்கு கோரிக்கை விடுத்தபோதும், இதுவரை எந்த தீர்வும் காணப்படாத நிலையில், முல்லைத்தீவு மாவட்ட மீனவர்கள், கடந்த செவ்வாய்க்கிழமை தொடர் போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர்.
தமது பிரச்சினை தீர்க்கப்படும் வரை போராட்டத்தை தொடரப் போவதாக அவர்கள் அறிவித்துள்ளனர்.
அதேவேளை, இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, முல்லைத்தீவு, கரைத்துறைப்பற்று பிரதேச சபையில் நேற்று கண்டனப் பிரேரணை ஒன்றும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து, தவிசாளர் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள், கவனயீர்ப்பு நடவடிக்கையில் பங்கெடுத்திருந்திருந்தனர்.