இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கைகளால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகத் தெரிவித்து முல்லைத்தீவு மீனவர்கள் கவனயீர்ப்புப் போராட்டம் மூன்றாவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அண்மைய நாட்களாக முல்லைத்தீவு மாவட்டக் கடற்பரப்பில் இந்திய மீனவர்களின் இழுவைப் படகுகளின் அத்துமீறிய செயல் காரணமாக தொடர்ச்சியாக தமது வாழ்வாதாரங்கள் பாதிக்கப்படுவதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், இந்திய-இலங்கை அரசாங்கங்கள் உரிய வகையில் பேச்சுவார்த்தைகளை நடத்தி இந்தப் பிரச்சினைக்குத் தீர்வை ஏற்படுத்தித் தருவமாறு முல்லைத்தீவு மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேவேளை, இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து கரைத்துறைப்பற்று பிரதேச சபையில் இன்று பிரோரணை நிறைவேற்றப்பட்டது. அதனைத்தொடர்ந்து, தவிசாளர் உள்ளிட்ட பிரதேச சபை உறுப்பினர்களும் கவனயீர்ப்பு நடவடிக்கையில் பங்கெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.