மொடேனா நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை அமெரிக்காவில் அவசர தேவைகளுக்கு பயன்படுத்தலாம் என்று, வல்லுநர் குழு பரிந்துரை செய்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்காவில், பைசர் நிறுவனத்தின் தடுப்பூசி பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
அமெரிக்க உணவு மற்றும் மருந்து வல்லுநர் குழுவினர், மொடேனா நிறுவன தடுப்பூசியின் செயல்திறன் குறித்து பரிசோதனை செய்து பரிந்துரைகளை வழங்கி உள்ளனர்.
இதன்படி, மொடேனா தடுப்பூசி மருந்தை அவசர தேவைகளுக்கு பயன்படுத்த அங்கீகாரம் அளிக்கலாம் என கூறியுள்ளனர்