யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்று 478 பேருக்கு பி.சி.ஆர். பரிசோதனை முன்னெடுக்கப்பட்டதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
இந்தப் பரிசோதனையில் யாழ்ப்பாணத்தில் மூவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு தொற்று கண்டறியப்பட்டவர்கள் இணுவில், மானிப்பாய், சண்டிலிப்பாய் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைவிட, முல்லைத்தீவில் தனிமைப்படுத்தலில் உள்ள இருவருக்கும் கோப்பாய் கொரோனா சிகிச்சை நிலையத்தைச் சேர்ந்த மூவருக்கும் வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.