நாடாளுமன்றத்தில், தமிழீழ விடுதலைப் புலிகளைப் பெருமைப்படுத்திப் புகழ்ந்து பேசுவதை தடுக்கும் வகையில், புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக சிறிலங்காவின் பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
ஜேர்மனி நாடாளுமன்றத்தில் ஹிட்லரையும் நாசி படைகளையும் புகழ்ந்து பேசுவது தடை செய்யப்பட்டுள்ளதாகவும், அவ்வாறு பேசுபவர்கள் சிறைத் தண்டனையை அனுபவிக்க நேரிடும் என்றும், சரத் வீரசேகர கூறியுள்ளார்.
ஆனால் சிறிலங்காவில் அத்தகைய நிலைமை இல்லை என்று தெரிவித்துள்ள அவர், விடுதலைப் புலிகளைப் பெருமைப்படுத்திப் புகழ்ந்து பேசுவதை தடுக்கும் வகையில், சட்டம் கொண்டு வரப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.