விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக கூட்டப்பட்ட டில்லி சட்டசபையின் சிறப்பு கூட்டத்தில், வேளாண் சட்ட பிரதிகளை முதல்வர் கெஜ்ரிவால் கிழித்தெறிந்துள்ளார்.
வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப், ஹரியானா மாநில விவசாயிகள் இரண்டு வாரங்களுக்கு மேலாக டில்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில், விவசாயிகளின் போராட்டம் தொடர்பாக விவாதிக்க டில்லி சட்டசபையின் சிறப்பு கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பங்கேற்ற முதல்வர் கெஜ்ரிவால், வேளாண் சட்ட பிரதிகளை கிழித்தெறிந்தார்.
அங்கு உரையாற்றிய அவர், “மத்திய அரசு, ஆங்கிலேயர்களை விட மோசமானவர்களாக மாறிவிடக்கூடாது. ஒவ்வொரு விவசாயியும் பகத் சிங்காக மாறியுள்ளனர்.” என்று தெரிவித்துள்ளார்.