இலங்கை கட்டளைகள் நிறுவனத்தினால் நிராகரிக்கப்பட்ட ரூபாய் 384 மில்லியன் மதிப்புள்ள 768 மெட்றிக் தொன் ரின் மீன்களை கொண்ட 48 கொள்கலன்களை மீண்டும் சீனாவுக்கு திருப்பி அனுப்ப தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய இறக்குமதி செய்யப்பட்ட ரின் மீன்களில் நிராகரிக்கப்பட்ட இருப்புக்களைக் கொண்ட முதல் இரண்டு கொள்கலன்கள் இன்று (வியாழக்கிழமை) மாலை அனுப்பப்படவுள்ளதாக இலங்கை சுங்க ஊடக செய்தித் தொடர்பாளர் சுனில் ஜெயரத்ன தெரிவித்துள்ளார்.
இலங்கை கட்டளைகள் நிறுவனத்தின் எஸ்.எல்.எஸ். 591 2014 தரச் சான்றிதழுடன் குறித்த ரின் மீன்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
ஏற்கனவே 2017 ஆம் ஆண்டு பிரித்தானியாவிலிருந்து சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட குப்பை கொள்கலன்களை மீள் ஏற்றுமதி செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டது.
அதன்படி இறக்குமதி செய்யப்பட்ட 260 கொள்கலன்களில் ஒக்டோபர் மாதம் 21 கொள்கலன்களும் நவம்பரில் 82 கொள்கலன்களும் பிரித்தானியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.