அமெரிக்க எரிசக்தி திணைக்களம் மீது பாரிய சைபர் தாக்குதலொன்று இடம்பெற்றுள்ளது.
அமெரிக்காவின் அணுவாயுதங்களிற்கு பொறுப்பான எரிசக்தி திணைக்களம் சைபர் தாக்குதலிற்குள்ளானமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சைபர் தாக்குதலை தொடர்ந்து பதில் நடவடிக்கையை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ள எரிசக்தி திணைக்களம் வர்த்தக வலையமைப்புகள் மாத்திரம் இலக்கு வைக்கப்பட்டுள்ளன எனவும் குறிப்பிட்டுள்ளது. அமெரிக்காவின் தேசிய அணுப் பாதுகாப்பு நிர்வாகத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகள் எதுவும் பாதிக்கப்படவில்லை என அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.