அவுஸ்திரேலிய நியுஸ்சவுத்வேல்சில் புதிதாக பரவிவரும் கொரோனா வைரசிற்கு காரணமான பிரதான தொற்றாளரை கண்டுபிடிக்க முடியாத நிலை காணப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதன்காரணமாக புதிய பரவல் குறித்த உண்மை அறியமுடியாத நிலை காணப்படுவதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளார்.
பிரதான தொற்றாளரை அடையாளம் காணமுடியாத நிலை காரணமாக எதனையும் உறுதியாக தெரிவிக்க முடியாத நிலை காணப்படுவதாக நியுசவுத்வேல்சின் பிரதம வைத்திய அதிகாரி கெரி சன்ட் (Gerry Sand) தெரிவித்துள்ளார்