கொரோனா தடுப்பூசி கட்டாயமாகப் போட்டுக்கொள்ள வேண்டியதில்லை என்று, இந்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் 6 கொரோனா தடுப்பூசிகள் பரிசோதனையில் இருப்பதாகவும், பாதுகாப்பு மற்றும் செயல்திறன் நிரூபிக்கப்பட்ட பின்னரே, அவை அறிமுகம் செய்யப்படும் என்றும் இந்திய அரசு கூறியுள்ளது.
விரைவில் ஒரு கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும் என்றும், ஆயினும், கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வது கட்டாயம் அல்ல, விரும்பினால், மட்டும் போட்டுக்கொள்ளலாம் என்றும் இந்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
எனினும், இதை அனைவரும் போட்டுக் கொள்வது நல்லது என்றும் இந்திய சுகாதார அமைச்சு அறிவுரை கூறியுள்ளது.