சிறிலங்கா கடல் எல்லைக்குள் அத்துமீறி பிரவேசித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 22 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
மீனவர்களின் கைது தொடர்பான அறிக்கை ஊர்காவற்றுறை நீதிவான் ஜூட்சனிடம் சமர்ப்பிக்கப்பட்டதையடுத்து, விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அதற்கமைய, இந்திய மீனவர்கள் 22 பேரையும் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை காரைநகர் கடற்படைத் தளத்தில் கொரோனா தனிமைப்படுத்தல் சட்டத்திற்கமைய, தனிமைப்படுத்தி தடுத்து வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
இவர்களுக்கு எதிர்வரும் 25 ஆம் திகதி பி.சி.ஆர் பரிசோதனையை மேற்கொள்ளுமாறும் நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
பி.சி.ஆர் பரிசோதனை அறிக்கையை நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்குமாறு வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆறுமுகம் கேதீஸ்வரனுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.