ஒன்ராரியோவில் 2ஆயிரத்து 300கொரோனா தொற்றாளர்கள் இன்றைய தினத்தின் இதுவரையிலான காலப்பகுதியில் கண்டறியப்பட்டுள்ளதாக பொதுசுகாதார அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
கடந்த ஏழு நாட்களாக 2ஆயிரத்து 89 தொற்றாளர்கள் சராசரியாக கண்டறியப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அத்துடன் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் 263பேர் சிகிச்சைகளைப் பெற்று வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
இறுதியாக 68ஆயிரத்து 246பேருக்கு கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்ட நிலையில் அவர்களில் 3.9சதவீதமானவர்கள் தொற்றுக்குள்ளானமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை நாடாளவிய ரீதியில் கொரோனா தொற்றால் இன்றைய தினத்தின் இதுவரையிலாக காலத்தில் 4ஆயிரத்து 670பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.